இந்தியா பெரிய துஷ்பிரயோகம் செய்கிறது - மோடியை சந்திக்கவுள்ள டிரம்ப்
மோடியை சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் பிரச்சாரம்
வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் மிச்சிகனில் நடந்த பொதுக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசுகையில், “இந்திய - அமெரிக்க வர்த்தக உறவை இந்தியா மிகப்பெரிய அளவில் துஷ்பிரயோகம் செய்கிறது. இறக்குமதிக்கு அதிக அளவில் வரி விதிக்கிறது.
மோடி சந்திப்பு
ஆனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அற்புதமானவர். அடுத்த வாரம் அமெரிக்க வரும் அவரை நான் சந்திப்பேன்” என பேசினார்.
வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்லும் மோடி, குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 23 ஆம் தேதி ‘Summit of the Future’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி, ஐ.நா சபையில் உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.