இது உங்களுக்குத்தான்.. நோபல் பரிசு வென்றவர் சொன்னது - டிரம்ப் தகவல்

Donald Trump Nobel Prize
By Sumathi Oct 11, 2025 10:37 AM GMT
Report

நோபல் பரிசு வென்ற மரியா தொலைபேசியில் கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு 

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும். நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்று கூறியிருந்தார்.

இது உங்களுக்குத்தான்.. நோபல் பரிசு வென்றவர் சொன்னது - டிரம்ப் தகவல் | Trump Says He Spoke With Nobel Prize Winner

தொடர்ந்து, வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளுக்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து அமைதியான மாற்றம் ஏற்படுவதற்காகவும் போராடியதற்காக மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், “அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது” என விமர்சித்திருந்தார்.

இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை அள்ளி கொடுக்கும் நாடு - அமெரிக்காவை விடுங்க..

இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை அள்ளி கொடுக்கும் நாடு - அமெரிக்காவை விடுங்க..

 டிரம்ப் தகவல்

மேலும், ட்ரம்ப் பேசுகையில், ”உண்மையில் நோபல் பரிசைப் பெற்றவர் இன்று எனக்குத் தொலைபேசியில் அழைத்தார். அவர் என்னிடம், 'நான் இந்தப் பரிசை உங்கள் கௌரவத்திற்காகப் பெற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், இது உண்மையில் உங்களுக்குத்தான் உரியது' என்று கூறினார்.

donald trump

நான் அவரிடம், 'அப்படியானால் அதைக் கொண்டு வந்து என்னிடமே கொடுத்து விடுங்கள்' என்று சொல்லவில்லை நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால், நான் மில்லியன்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினேன் என தெரிவித்துள்ளார்.