டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு - ஏன் தெரியுமா?
டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும். நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலத்திற்குப் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்ப்பின் பெயரை பிப்.,1க்குப் பிறகு பரிந்துரை செய்துள்ளன. இதுவே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
நோபல் பரிசு நிராகரிப்பு
இது குறித்து நார்வேவைச் சேர்ந்த நோபல் பரிசு தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோர்கன் வாட்னே பிரிட்னெஸ் கூறுகையில், நோபல் பரிசு தேர்வு கமிட்டி, அனைத்து வகையான பிரசாரங்கள், ஊடக கவனத்தையும் பார்த்துள்ளது. அமைதிக்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து ஆயிரக்கணக்கான கடிதங்களை ஆண்டுதோறும் பெறுகிறோம்.
நாங்கள் அமர்ந்திருக்கும் அறை தைரியம் மற்றும் நேர்மையால் நிரம்பியுள்ளது. எங்களின் முடிவை ஆல்பிரட் நோபலின் (நோபல் பரிசை அறிமுகப்படுத்தியவர்) செயல் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.