வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கோள் - அசுரவேகத்தில் வளர்ச்சி!
வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிசய கோள்
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா 2008ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இளம் கோளுக்கு 'சா 1107 - 7626' என்று பெயர் சூட்டியுள்ளது.
இந்த புதிய கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது. மேலும், இது வளி மண்டலத்தில் துாசு மற்றும் பிற பொருட்களின் மோதல்கள் அல்லது இணைவதன் வாயிலாக உருவாகவில்லை.
விஞ்ஞானிகள் ஷாக்
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் இந்த கோள் ஒவ்வொரு வினாடியும், தன் சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் துாசி மற்றும் வாயு பொருட்களை தன்னுள் ஈர்த்து விழுங்கி வருகிறது.
[
ஒவ்வொரு வினாடியும், தன் சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் துாசி மற்றும் வாயு பொருட்களை தன்னுள் ஈர்த்து விழுங்கி வருகிறது. இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இது பற்றி கூடுதல் தகவல்களை பெற, விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.