அமெரிக்கப் ராணுவ படையில் இவர்களுக்கு தடை.. அதிரவைத்த டிரம்ப் உத்தரவு - காரணம் என்ன?
அமெரிக்கப் படையில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்கச் செய்யும் வகையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
டிரம்ப்
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற முதல் நாளே டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதன்படி, குடியுரிமை தொடர்பான உத்தரவு,பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.தேசிய எரிசக்தி அவசர நிலை என்ற உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் டிக்டோக் செயலிக்குத் தடை,இஸ்ரேல் மீதான தடை நீக்கம் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கருப்பு பட்டியலிலிருந்து கியூபாவை நீக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த வரிசையில் அமெரிக்கப் படையில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்கச் செய்யும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.அமெரிக்க மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்கச் செய்யும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்கப் படை
இது குறித்து ட்ரம்ப் தனது உத்தரவில், அமெரிக்கப் படைகளின் சேவை, ஒரு மரியாதைக்குரிய, உண்மையுள்ள, ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு, தாங்கள் பிறந்த பாலினத்தை அல்லாமல் வேறு பாலினமாக அடையாளம் காணும் நபர்களுடன் முரண்படுகிறது.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட, இராணுவத் தயார்நிலைக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்று தெரிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அமெரிக்கா ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் என்ற செயல் உத்தரவை டிரம்ப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.