அந்த முகமும்.. அந்த உதடுகளும்.. பெண் ஊழியரை வர்ணித்த ட்ரம்ப் - வெடித்த சர்ச்சை!

Donald Trump United States of America
By Sumathi Aug 04, 2025 08:30 AM GMT
Report

ட்ரம்ப், இளம்பெண்ணை பொதுவெளியில் வைத்து வர்ணித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

கரோலின் லெவிட்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக கரோலின் லெவிட்டை(27) நியமனம் செய்வதாக அறிவித்திருந்தார்.

Donald Trump - Karoline Leavitt

அதன்படி, இளம் வயதில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளராக பதவியேற்ற பெண் என்ற பெருமையை கரோலின் லெவிட் பெற்றார். சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய கரோலின் லெவிட்,

"அதிபர் டிரம்ப் தனது ஆறு மாத பதவிக்காலத்தில் சராசரியாக மாதத்திற்கு ஒரு சமாதான பேச்சுவார்த்தை அல்லது போர்நிறுத்தத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அதிபர் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இனி இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது - கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் ஆர்டர்!

இனி இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது - கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் ஆர்டர்!

வர்ணித்த டிரம்ப்

இந்நிலையில் டிரம்ப் பேட்டி ஒன்ரில், "அவர் மிகவும் பிரபலமானவராக மாறிவிட்டார். அந்த முகமும், அந்த மூளையும், அந்த உதடுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திர துப்பாக்கி போல் செயல்படுகின்றன.

அந்த முகமும்.. அந்த உதடுகளும்.. பெண் ஊழியரை வர்ணித்த ட்ரம்ப் - வெடித்த சர்ச்சை! | Trump S Flirty Praise For Karoline Leavitt Sparks

கரோலின் லெவிட் மிகச்சிறந்த பெண்மணி. அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது" என்று புகழாரம் சூட்டியுள்ளார். பொதுவெளியில் பெண் ஊழியரை டிரம்ப் இவ்வாறு வர்ணித்தது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.