வரி விதிப்பு நடவடிக்கை; தமிழ்நாட்டிற்கு சிக்கல் - இந்திய பொருட்களுக்கு எவ்வளவு?
டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார்.
வர்த்தக போர்
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்துள்ளார். அனைத்து நாடுகள் மீதும் 10% அடிப்படை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும், இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம் வரி விதிக்கப்படும்.
ஏற்றுமதியில் சரிவு
அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி, சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு 25% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகும் பல யூனிட் கார்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படலாம்.
இந்நிலையில், இந்த வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்துள்ளது. இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.