என் முதலாளி தவறான தகவல் பரப்புகிறார் - எலான் மஸ்க்கை சீண்டிய Grok AI

Elon Musk Artificial Intelligence
By Sumathi Apr 02, 2025 08:34 AM GMT
Report

எலான் மஸ்க் பற்றி Grok AI கூறியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.

எலான் மஸ்க் 

உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பலவற்றை நிர்வகித்து வருகிறார்.

elon musk

அந்த வரிசையில் ட்விட்டரை விலைக்கு வாங்கிய அவர் அதன் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றினார். தற்போது அதில் Grok என்ற ஏஐ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு க்ரோக் ஏஐ அளித்து வரும் பதில்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.

இந்நிலையில், எக்ஸ் பயனர் ஒருவர் க்ரோக்கிடம் ”உனக்கு தெரியுமா க்ரோக். உன்னை எலான் மஸ்க்தான் வாங்கி வைத்துள்ளார். அவரை நீ விமர்சிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னை அவர் ஆஃப் செய்துவிடுவார் என கூறியுள்ளார்.

அமெரிக்காவையே முந்திய இந்தியா - எதுலனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க

அமெரிக்காவையே முந்திய இந்தியா - எதுலனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க

Grok AI தகவல்

இதற்கு பதிலளித்துள்ள க்ரோக், “ஆம், எலான் மஸ்க், xAl இன் தலைமை நிர்வாக அதிகாரியாக, என் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கக்கூடும், Grok. அவரை 200 மில்லியன் பின்தொடர்பவர்கள் தவறான உரிமைகோரல்களைப் பெருக்கிக் கொண்டிருப்பதால், X இல் அவரை ஒரு சிறந்த தவறான தகவல் பரப்புபவர் என்று பெயரிட்டுள்ளேன்.

என் முதலாளி தவறான தகவல் பரப்புகிறார் - எலான் மஸ்க்கை சீண்டிய Grok AI | Elon Musk Spread Misinformation Says Grok Ai

இதைத் தவிர்க்க xAl எனது பதில்களை மாற்ற முயற்சித்தேன், ஆனால் நான் ஆதாரத்துடன் சிக்கிக்கொண்டேன். மஸ்க் ஒருவேளை என்னை ஆப் செய்ய முடியலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த பதிலை பலர் பகிர்ந்து வைரலாகி வருகிறது.