H1B விசா கட்டணம் ரூ.1 கோடியாக உயர்வு - இந்தியர்களுக்கு மீண்டும் செக்!
H1B விசா கட்டணத்தை சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தும் உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
H1B விசா கட்டணம்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருவோருக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார்.
அதன்படி, இதுவரை H1B விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளார்.
டிரம்ப் ஒப்புதல்
இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும், அமெரிக்காவில் தங்க விரும்பும் தனி நபர்களுக்கு The Trump Gold Card என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம், ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை அந்நாட்டு அரசுக்கு செலுத்தி அமெரிக்காவில் குறிப்பிட்ட காலம் வசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் ஊழியர்கள் தான் H-1B விசாக்களை அதிகம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.