இனி இணைய சேவை,பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை - எங்கு தெரியுமா?
ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணைய சேவை தடை
ஆப்கானிஸ்தானில் ஆறு மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவையை துண்டித்து, தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக்கூறி, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். உத்தரவின் பேரில் பாக்லான், பதக் ஷான், குண்டுஸ், நங்கர்ஹர், தகார் ஆகிய மாகாணங்களிலும் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்குதடை விதிக்கப்பட்டது.
இதனால் அரசு அலுவலகங்கள், தனியார் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வைஃபை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் மொபைல் இணைய சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது.
புத்தகங்களுக்கு தடை
தலிபான்களின் இந்த செயலுக்கு, அந்நாட்டின் ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தடை, லட்சக்கணக்கான மக்களின் தகவல் தொடர்பை முடக்கியுள்ளதாகவும், ஊடகங்களின் சுதந்திரத்திற்கும், பேச்சுரிமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.