அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்க உள்ள டிரம்ப் - 1 கோடி பேரை நாடு கடத்த திட்டம்
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்த உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே வெற்றி பெற்றால் சட்டவிரோதமாகஅமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என டிரம்ப் பேசி வந்தார்.
அவசரநிலை பிரகடனம்
இந்நிலையில் ட்ரூத் சோசியல் என்னும் சமூக ஊடகத்தில், "டிரம்ப் அவசரநிலையை பிரகடன படுத்தி, ராணுவம் மூலம் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது" என ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பதிலளித்த டிரம்ப், உண்மைதான் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அதிகளவிலான இந்தியர்களும் உள்ளனர். டிரம்ப்பின் இந்த பதில் சர்வதேச அரசியலில் விவாதமாகியுள்ளது.