கல்வித்துறையை கலைத்த டிரம்ப் - தமிழ்நாடு வைக்கும் அதே கோரிக்கை!
கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கல்வித்துறை
அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசின் செலவுகளை வெகுவாக குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கல்வித்துறையையும் கலைக்க அவர் முடிவு செய்து, அதன் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், கல்வித்துறையின் முழு அதிகாரமும் இனி மாகாணங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
டிரம்ப் உத்தரவு
மேலும், இந்த உத்தரவு அமெரிக்காவின் கூட்டாட்சி கல்வித் துறையை நிரந்தரமாக நீக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அங்கு கல்வியில் பெரியஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என பெற்றோர் தரப்பில் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்தியாவில் கல்வி என்பது பொதுப் பிரிவான மாநில மற்றும் மத்திய பிரிவு இரண்டிலும் உள்ளது. எனவே, கல்வியை முழுக்க முழுக்க மாநில பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் பல வருடங்களாக கோரிக்கையாக வைக்கும் விஷயத்தை, அமெரிக்க அதிபர் அமல்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.