குளியலறையில் கிடைத்த ரகசிய ஆவணங்கள் - தொக்கா சிக்கிய டிரம்ப்!
அமெரிக்கா முன்னாள் அதிபரான டிரம்ப் வீட்டில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் 2014-ல் இருந்து தொடர்ந்து 4 முறை தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக இருந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு வெள்ளைமாளிகையை காலி செய்த ட்ரம்ப் கையேடு முக்கிய ஆவணமான 'க்ளாஸிஃபைட் டாக்குமென்ட்ஸ்' என்ற மிகமுக்கியமான ஆவணத்தை எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சிக்கலில் டிரம்ப்
இந்நிலையில், இவர்மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் வீட்டில் கிடைத்த ரகசிய ஆவணங்களில், அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள், ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளி நாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக வருகிற 13-ம் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரிவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.