அதிபர் பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு - பரபரப்பு!
அதிபர் ஜோ பைடன் வீட்டில் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரகசிய ஆவணம்
அமெரிக்க வாஷிங்டன் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஆவணங்கள் ஆகும்.
ஆகவே, இதனை தொடர்ந்து இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசின் மிகமுக்கிய ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில்
பரபரப்பு
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராபர்ட் ஹுர் தலைமையில் விசாரணைக்கு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அந்த ஆவணங்களை அமெரிக்கச் சட்டத்துறை ஆய்வு செய்து வருகின்றனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.