பறக்கும் விமானத்தில் முத்தம் கொடுக்க முயன்ற ட்ரம்ப் - 81 வயது மூதாட்டி பகீர் புகார்

Donald Trump United States of America Sexual harassment
By Sumathi May 04, 2023 05:42 AM GMT
Report

விமான பயணத்தின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் ட்ரம்ப் மீது புகாரளித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் 

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டாரமி டேனியல்ஸ், பத்திரிகையாளரும், புகழ்பெற்ற எழுத்தாளுருமான ழான் கரோல் என்ற பெண்மணி ஆகியோர் ட்ரம்ப் மீது பாலியல் புகார்களை முன்வைத்துள்ளனர்.

பறக்கும் விமானத்தில் முத்தம் கொடுக்க முயன்ற ட்ரம்ப் - 81 வயது மூதாட்டி பகீர் புகார் | Trump Groped Me Flight Woman Tells Us Civil Trial

இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ற்றொரு பெண் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பாலியல் புகார்

1978இல் விமானப் பயணம் மேற்கொண்ட போது அதில் ட்ரம்ப் சக பயணியாக வந்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக தனக்கு முத்தம் கொடுக்க முயற்சித்தும், மார்பகங்களை சீண்டியும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஜெசிக்கா லீட்ஸ்(81) என்ற பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

பறக்கும் விமானத்தில் முத்தம் கொடுக்க முயன்ற ட்ரம்ப் - 81 வயது மூதாட்டி பகீர் புகார் | Trump Groped Me Flight Woman Tells Us Civil Trial

மேலும், தனது ஸ்கர்ட் உடையில் அத்துமீறி கை வைத்து தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.