ட்ரம்ப் மீது அவதுாறு வழக்கு; ஆபாச பட நடிகைக்கு ரூ.1 கோடி அபராதம் விதிப்பு
ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த அவதுாறு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளது.
ட்ரம்ப் மீது அவதுாறு வழக்கு தள்ளுபடி
ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்பு குறித்து வெளியில் தெரிவிக்க கூடாது என தனக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு முன்னாள் அதிபர் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்து இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ட்ரம்ப் மீது ஸ்டார்மி அவதுாறு வழக்கு தொடுத்தார்.
இதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரூ.2.4 கோடி அபாரதம் விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்டார்மிக்கு மேலும் ரூ.2 கோடி அபராதம் விதித்தது.

இதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள 9-வது சர்க்யூட் கோர்ட் அப்பீல்ஜில் ஸ்டார்மி மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்டார்மி மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மேல்முறையீட்டு செலவாக ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan