கணுக்காலில் வீக்கம்.. இதயத்துக்கு ரத்தம் செல்வதில் பாதிப்பு - டிரம்ப் ஷாக் தகவல்
டொனால்ட் டிரம்ப்புக்கு CVI பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை (CVI - ”க்ரானிக் வெனஸ் இன்சஃபிசியன்ஸி”) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வெள்ளை மாளிகையின் அறிக்கையில், அதிபருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பா நிலை ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ளது. ட்ரம்பிற்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு போன்ற சிக்கல்கள் இல்லை.
அவரது இதய செயல்பாடு சாதாரணமாக இருக்கிறது. அடிக்கடி பொது இடங்களில் கைகுலுக்கல்கள் மற்றும் வழக்கமான ஆஸ்பிரின் பயன்பாடு காரணமாக டிரம்பின் கையில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
CVI பாதிப்பு
பொதுவாக 70 வயது நிரம்பியவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வருவது இயல்பு தான். டிரம்ப்புக்கு தற்போது 79 வயது ஆகும் நிலையில் அவர் அந்த பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிகுறியாக கால்களில் வலி மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படும்.
அதேபோல் நீண்டநேரம் நின்ற பிறகு சோர்வு ஏற்படும். கணுக்கால்களை சுற்றி வீக்கம் ஏற்படும். கால்களில் அரிப்பு மற்றும் கூச்ச உணர்வு ஏற்படும். கால்களில் வீக்கம் மட்டுமின்றி தோலில் நிற மாற்றங்கள், புண்களை ஏற்படுத்தும்.
இதிலிருந்து விடுபட வழக்கமான நடைபயிற்சி, உடல் எடையை கட்டுப்படுத்துதல், கால்களை உயரமாக வைத்து கொள்வது, ஸ்க்லேரோதெரபி சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.