அதிபரான டொனால்ட் டிரம்ப்.. நிறைவேறுமா இந்திய மாணவர்களின் கனவு? முழு விவரம் இதோ!
டிரம்ப் அதிபராக தேர்வானதால் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா என இப்பதிவில் பார்க்கலாம்.
இந்திய மாணவர்கள்
பெரிதும் எதிர்பார்க்கபட்ட அமெரிக்கா அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்னிக்கை நடைபெற்றதில் 270 இடங்கள் தேவைப்படும் நிலையில் 267 இடங்களில் வெற்றி பெற்று குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ளார். தற்போது அவர் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் அதிகளவு விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து அமெரிக்க எல்லையில் முறைகேடாக வருவதை மொத்தமாக தடுப்பதில் குறியாக இருந்தாலும்,
வெளிநாட்டு மாணவர்கள் வருகையை தடுக்க எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது டொனால்ட் தேர்வான பிறகு அமெரிக்காவில் படிப்புக்காக வரக்கூடிய இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
விவரம் இதோ
இது குறித்து ஐடிபி எஜுகேஷன் எனப்படும் தளத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் பேட்டியில் கூறியதாவது, டிரம்ப்பின் வருகையால் அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறையாது.
டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் தான் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா கல்லூரிகளில் பயிலும் வெளிநாட்டவர்களுக்கு ஆட்டோமேட்டிக் முறையில்
கிரீன் கார்டு பெறுவதற்கான தகுதியை பெற சட்டம் கொண்டுவரப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார். எனவே 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் படிப்புக்காக அமெரிக்கா வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 15 லிருந்து 20% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்.
இம்முறை டிரம்ப் அரசு வரி குறைப்பு, அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிப்பது உள்ளிட்டவையில் கவனம் செலுத்த இருக்கிறது. இதனால் அங்கு ஐடி, மருத்துவ துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளதால் அமெரிக்காவில் சென்று படிக்க நினைக்கும் இந்தியர்களுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.