ட்ரம்ப் என் தந்தை.. நான்தான் உண்மையான மகள் - இளம்பெண் சொன்ன ஷாக் தகவல்!
டொனால்ட் ட்ரம்பின் உண்மையான மகள் நாந்தான் என பெண் ஒருவர் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
பெரிதும் எதிர்பார்க்கபட்ட அமெரிக்கா அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துவிட்டது. தற்போது டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் அதிகளவு விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான் தன்னுடைய தந்தை என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரலமாக ஆங்கிலம் பேசும் இளம்பெண், செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில் ,எனது தந்தை ட்ரம்ப் மிகவும் கடினமானவர். என்னை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்று, தாய் இவானாவை அவர் எப்போதும் கடிந்துக்கொண்டே இருப்பார். இவானா மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய்.
இளம்பெண்
என் மகளை உன்னால் கவனிக்க முடியாது என்றும் திட்டிக்கொண்டிருப்பார். வெளிநாட்டினர் இங்கு வந்து என்னை பார்த்துவிட்டு போகிறார்கள். நான் இங்கு என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என ஆதங்கப்படுகிறார்கள். நான் எனது தந்தையை சந்திக்க அமெரிக்கா செல்ல இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா, செக் குடியரை சேர்ந்த பிரபல மாடல் அழகியாவார். இவர்களுக்கு 1977ம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர்,
இவான்கா டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் 1990ம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil