பிரபல கடையில்..பிரெஞ்ச் பிரைஸ் சமைத்து விற்க தொடங்கிய டொனால்ட் டிரம்ப் - வைரல் பதிவு!

Donald Trump Kamala Harris World Fast Food US election 2024
By Swetha Oct 21, 2024 09:00 AM GMT
Report

டொனால்ட் டிரம்ப் ஒரு கடையில் பிரெஞ்ச் பிரைஸ் சமைத்து வாடிக்கையாளா்களுக்கு வழங்கினார்.

பிரபல கடையில்..

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்னும் 15 நாட்களுக்குள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பிரபல கடையில்..பிரெஞ்ச் பிரைஸ் சமைத்து விற்க தொடங்கிய டொனால்ட் டிரம்ப் - வைரல் பதிவு! | Donald Trump Cooks French Fries And Sells It

அவருக்கு எதிராக களம் இறங்கி உள்ள முன்ளா் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சாரத்தை இன்னும் வலுவான யுத்தியுடன் மாற்றி கொண்டே வருகிறார். அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணத்திற்கு பிரச்சாரம் சென்ற டொனால்ட் டிரம்ப்,

குளியலறையில் கிடைத்த ரகசிய ஆவணங்கள் - தொக்கா சிக்கிய டிரம்ப்!

குளியலறையில் கிடைத்த ரகசிய ஆவணங்கள் - தொக்கா சிக்கிய டிரம்ப்!

பிரெஞ்ச் பிரைஸ்

அங்குள்ள பிரபல பாஸ்ட் புட் கடைக்கு சென்றார். பின்னா் தனது கையால் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்து, வாடிக்கையாளா்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார். டொனால்ட் டிரம்ப்பிற்கு பிரெஞ்ச் பிரைஸ் செய்வதற்கு தெரியாது என கூறப்படுகிறது.

பிரபல கடையில்..பிரெஞ்ச் பிரைஸ் சமைத்து விற்க தொடங்கிய டொனால்ட் டிரம்ப் - வைரல் பதிவு! | Donald Trump Cooks French Fries And Sells It

எனவே, அவர் அங்கிருந்த ஊழியா் உதவியுடன் பிரெஞ்ச் பிரைஸ் செய்வது எப்படி என்பதை கற்று கொண்டார். தற்போது இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.