பிரஸ்மீட்டில் உட்கார்ந்துட்டே டிரம்ப் முரட்டு தூக்கம் - புகைப்படம் வைரல்!
அதிபர் டிரம்ப் குட்டி தூக்கம் போட்டதான காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்து கொண்டே தூங்கி உள்ளார். தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தூங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, டிரம்பின் உடல்நிலை கவலை தருவதாகவும், அதுவும் பணி நேரத்திலேயே அவரது செயல்பாடு அதிருப்திகரமானது என்று டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குட்டி தூக்கம்
இது டிரம்புக்கு முதல் முறை அல்ல. ஜூலை மாத எரிசக்தி நிகழ்ச்சி, செப்டம்பர் யு.எஸ். ஓபன், கடந்த ஆண்டு ஹஷ் மணி வழக்கு விசாரணை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் டிரம்ப் தூங்கியது போல் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆனால், அவரது நிர்வாக அதிகாரிகள் “டிரம்ப் எப்போது தூங்குகிறார் என்றே தெரியாது, எப்போதும் வேலை செய்கிறார்” என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.