திடீர் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் - பரபரப்பான தலைநகரம்!
காற்று மாசுபாட்டைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
காற்று மாசுபாடு
டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு மற்றும் முதல்வர் ரேகா குப்தாவுக்கு எதிராக ஜன்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் ஜேஎன்யு (JNUSU) தலைவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.டெல்லியின் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்றுத் தரத்தைக் கட்டுப்படுத்த உரிய கொள்கைகள் மற்றும் உடனடி நடவடிக்கை கோரி, இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வெடித்த போராட்டம்
இப்போராட்டத்தில், டெல்லியில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு முதல்வர் ரேகா குப்தாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தலைநகரில் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி வரும் காற்று மாசுபாட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தத் தவறியதாக முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான
அரசு மீது போராட்டக்காரர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.