இந்தியரா - கருப்பரா கமலா ஹாரிஸ்? சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பிய டிரம்ப்!!
2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நேர்காணலில் பங்கேற்ற டிரம்ப் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் உண்மையில் கறுப்பா அல்லது இனத்தை அரசியல் வசதியாகப் பயன்படுத்துகிறாரா என்று வினவியுள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல்
அமெரிக்கா நாட்டின் அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. டிரம்ப் சுடப்பட்டதில் துவங்கி, ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது தேர்தல் களம்.
இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் - டிரம்ப் இடையே கடும் போட்டிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், டிரம்ப் கமலா ஹாரிஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
கேள்வி
சிகாகோவில் நடந்த தேசிய கறுப்பு பத்திரிகையாளர்களின் மாநாட்டின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற டிரம்ப் கமலா ஹாரிஸ் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.
கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் பேசியது வருமாறு, கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவராகவும் ஊக்குவிப்பவராகவும் இருந்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவரை தன்னை கறுப்பாக மாற்றி என்றும் அவர் கறுப்பானவர் என்று தனக்குத் தெரியாது, என்று கூறினார்.
மேலும், இப்போது அவர் தன்னை கருப்பராக அறியப்பட விரும்புகிறார் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், ஆகையால் அது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறி, அவர் இந்தியரா அல்லது கறுப்பரா? என கட்டமாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.