இந்திய வம்சாவளி பெண்ணை மணந்தவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்த டிரம்ப்!! யார் உஷா சிலுக்குரி?

Donald Trump United States of America Election
By Karthick Jul 16, 2024 06:08 AM GMT
Report

அமெரிக்கா அதிபர் தேர்தல், சூடுபிடித்துள்ளது.

சுடப்பட்ட டிரம்ப்

அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். மறுபுறத்தில் அவரை எதிர்த்து, குடியாசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

Donald Trump Shot Philadelphia

அதிபர் தேர்தலின் பிரச்சாரத்தின் போது, பிலடெல்பியா மாகாணத்தில் சில தினங்கள் முன்பு டிரம்ப் சுடப்பட்டது உலகளவில் எதிரொலித்தது. இந்த சூழலில் தான், துணை அதிபராக டிரம்ப் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த ஜே.டி.வான்ஸ்(J.D.Vance) அறிவிக்கப்பட்டுள்ளார்.

உஷா சிலுக்குரி

39 வயதான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வான்ஸ், இப்போது முதல் முறை செனட் உறுப்பினராக உள்ளார். ஓஹியோவின் பிறந்து வளர்ந்தவர், கடற்படையில் சேர்ந்து ஈராக்கில் பணியாற்றினார். அதனை தொடர்ந்து ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் பட்டம் பெற்று, அமெரிக்காவின் சிலிக்கான் valley'இல் Venture Capitalist;ஆக பணியாற்றி இருக்கிறார்.

Donald trump vice president Jd vance

2016 ஆம் ஆண்டில் டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது வெளியிடப்பட்ட பிரபலமான "ஹில்பில்லி எலிஜி" (Hillbilly Elegy) என்ற குறிப்பின் மூலமாக பெறும் பிரபலமடைந்தார் வான்ஸ். இதனை தொடர்ந்து டிரம்ப்பின் அறிமுகம் கிடைக்க, வான்ஸ் தனது அரசியல் பயணத்தை துவங்கினார்.

தேர்தல் பேரணியில் சுடப்பட்டார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்!! அதிர்ந்த அமெரிக்கா

தேர்தல் பேரணியில் சுடப்பட்டார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்!! அதிர்ந்த அமெரிக்கா

வான்ஸின் மனைவியான உஷா சிலுக்குரி வான்ஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.மேற்குவங்கத்தின் சிலுக்குரியில் உஷா பிறந்தவர். வழக்கறிஞரான உஷா வான்ஸ், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் மகள்.

Donald trump vice president Jd vance and usha vance

அவரை குறித்து நியூயார்க் டைம்ஸ் தகவலின் படி, அவர் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார்.