மனதை திடப்படுத்திக்கோங்க - பார்க்க வேண்டிய அசத்தல் வெப் சீரிஸின் லிஸ்ட் இதோ..
இந்த வெப் தொடர்களை மிஸ் பண்ணாம கண்டிப்பா பார்க்கலாம்.
வெப் தொடர்
டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் டெல்லி கிரைம். உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த தொடர் நெட்பிலிக்ஸ் தளத்தில் உள்ளது.
மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர் ஜிகினா வோரா சிறையில் பட்ட கஷ்டங்களை வைத்து எடுக்கப்பட்ட தொடர் ஸ்கூப். இதுவும் நெட்பிலிக்ஸ் தளத்தில் உள்ளது.
ஒரே வீட்டில் இறந்து கிடந்த 11 பேரின் மர்மமான வழக்கை மையமாக வைத்து ஆவணப்படமாக எடுக்கப்பட்ட தொடர் ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ். இது புராரி கொலை என அறியப்படுகிறது. இதனை நெட்பிலிக்ஸில் பார்க்கலாம்.
சினிமா அரங்கின் உரிமையாளர்களுக்கு எதிரான நீதிக்கான தம்பதியினரின் 26 ஆண்டுகால போராட்டத்தை ஆவணத்தொடராக அமையப்பெற்றது ட்ரையல் பை ஃபயர். கிருஷ்ணமூர்த்தி எழுதிய நினைவுக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டது. ஏழு எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை நெட்பிலிக்ஸில் காணலாம்.
போபாலில் வாயு வெளியாகி ஏற்பட்ட ரசாயன விபத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் தி ரயில்வே மேன். நெட்பிலிக்ஸ் மூலம் காணலாம்.