குடிபோதையில் விபரீதம்.. நடைமேடையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி - 3 பேர் பலி!

India Accident Death
By Swetha Dec 23, 2024 12:00 PM GMT
Report

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.

லாரி 

மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் வகோலி சௌக் பகுதியில் சாலையோரம் உள்ள நடைபாதையில் 12 பேர் இரவு அசந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி தீடீரென நிலைதடுமாறி அவர்கள் மீது ஏறி இறங்கியது.

குடிபோதையில் விபரீதம்.. நடைமேடையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி - 3 பேர் பலி! | Truck Driver Killed 3 People Sleeping On Footpath

இதில் 2 குழந்தைகள் உட்பட மூவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பேருந்து - மினி லாரி மோதி பயங்கர விபத்து.. துடி துடித்து பலியான 2 உயிர்!

பேருந்து - மினி லாரி மோதி பயங்கர விபத்து.. துடி துடித்து பலியான 2 உயிர்!

3 பேர் பலி

மேலும், அந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. லாரியை இயக்கிய, 26 வயதான சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

குடிபோதையில் விபரீதம்.. நடைமேடையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி - 3 பேர் பலி! | Truck Driver Killed 3 People Sleeping On Footpath

அதில், டிரைவர் குடிப்போதையில் இருந்தது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்போதையில் லாரியை சங்கர் இயக்கியதால், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.