14வருடங்களுக்கு பின் திரையில் விஜய்-த்ரிஷா கெமிஸ்ட்ரி..? ஆர்வத்தில் ரசிகர்கள்!

Vijay Trisha Only Kollywood Gossip Today
By Sumathi Aug 09, 2022 10:33 AM GMT
Report

 'விஜய் 67' படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி-67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி-67" திரைப்படத்தின் அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் உண்டாகி வருகிறது. பொதுவாக விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஜோடியாக விஜய் மற்றும் திரிஷாவின் ஜோடி அமைந்துள்ளது.

14வருடங்களுக்கு பின் திரையில் விஜய்-த்ரிஷா கெமிஸ்ட்ரி..? ஆர்வத்தில் ரசிகர்கள்! | Trisha With Vijay After 14 Years In Thalapathy 67

இவர்கள் இருவரும் முதன்முதலில் "கில்லி" படத்தில் ஜோடியாக இனைந்து நடித்ததுள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தால் இவர்களது ஜோடி அனைவர்க்கும் பிடித்தமானதாக அமைந்தது.

 விஜய் - திரிஷா

அதற்கு பின் "ஆதி", "திருப்பாச்சி", மற்றும் "குருவி" போன்ற படத்தில் திரிஷா விஜயுடன் இனைந்து ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் ஜோடிக்கு தனி ரசிகர் பட்டளமே உள்ளது எனலாம். ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடியை இனி எப்போது பார்ப்போம் என்று எதிர்பாத்து கொண்டிருந்த நிலையில்,

14வருடங்களுக்கு பின் திரையில் விஜய்-த்ரிஷா கெமிஸ்ட்ரி..? ஆர்வத்தில் ரசிகர்கள்! | Trisha With Vijay After 14 Years In Thalapathy 67

தற்போது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் மற்றும் திரிஷா இனைந்து ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

ரசிகர்கள் ஆர்வம் 

குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி-67" படத்தில் தான் விஜயுடன் திரிஷா இனைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டுவருகிறது. இப்படத்தில் முன்னதாக சமந்தா இனைந்து நடிக்கப்படுவதாக சில செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது திரிஷா நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இப்படத்தில் மேலும் 6 வில்லன்கள் நடிக்கப்போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.