நிச்சயம் அவர் தான் - திரிஷாவிற்கு காதலர் தினத்தில் வந்த பரிசு - இவர் தான் கொடுத்ததா..?
தமிழ், தெலுங்கு என தொடர்ந்து அடுத்தடுத்த முக்கிய படங்களில் ஒப்பந்தமாகி வருகின்றார் திரிஷா.
திரிஷா
பெரும்பாலான நடிகைகள் 30 வயதை நெருங்கினாலே, சினிமாவை விட்டு விலகி விடும் சூழலில், தற்போது 40 வயதை எட்டி இருக்கும் நிலையிலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா.
அண்மையில் விஜய்யின் "லியோ", படத்தில் நடித்த அவர், தற்போது அஜித்தின் "விடா முயற்சி", நடிகர் சிரஞ்சீவியின் "விஸ்வம்பரா" போன்ற படங்களில் அடுத்தடுத்த கமிட்டாகியுள்ளார்.
நெருக்கமான அவர்...
40 வயதாகியும் தற்போது வரை திருமண பந்தத்தில் திரிஷா இணையாத நிலையில், அது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் மேலும் ஒரு வலுவான கருத்தாக கடந்த 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவு பெரும் வைரலானது.
இந்நிலையில் தான், அது குறித்து பலரும் பல கருத்துக்களை பேச துவங்கி விட்டனர். திரிஷா வெளியிட்ட பதிவில் பலரும் நிச்சயமாக இந்த பரிசை அவருக்கு நெருக்கமான ஒருவர் தான் அளித்திருப்பார்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
You May Like This Video