அந்த நடிகர் முன்னாடியே அலப்பறை...ஷூட்டிங் ஸ்பாட்டில் மது அருந்திய திரிஷா...?
40 வயதை எட்டியும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் திரிஷா.
திரிஷா
பெரும்பாலான நடிகைகள் 30 வயதை நெருங்கினாலே, சினிமாவை விட்டு விலகி விடும் சூழலில், தற்போது 40 வயதை எட்டி இருக்கும் நிலையிலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா.
அண்மையில் விஜய்யின் "லியோ", படத்தில் நடித்த அவர், தற்போது அஜித்தின் "விடா முயற்சி", நடிகர் சிரஞ்சீவியின் "விஸ்வம்பரா" போன்ற படங்களில் அடுத்தடுத்த கமிட்டாகியுள்ளார்.
தென்னிந்தியாவின் பெண்களில் மிக பெரிய ஆளுமையான திரிஷா குறித்து அவ்வப்போது சில நெகட்டிவ் கருத்துக்களும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. அப்படி ஒரு கருத்து தான் தற்போது மீண்டும் பரவ துவங்கியுள்ளது.
அதாவது நடிகை திரிஷா முன்னணி நடிகரின் படப்பிடிப்பு ஒன்றில், சென்னை அருகே உள்ள ஸ்லம் ஏரியாவில் மது வாங்கி கொடுத்ததாக சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியுள்ளார்.