ஹனிமூனையும் பிளான் பண்ணுங்க;திருமண செய்தி - உறுதிசெய்த த்ரிஷா!
திருமண வதந்திக்கு நடிகை த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர், கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் பஞ்சாப்பை சேர்ந்த ஒரு தொழிலதிபரை த்ரிஷா திருமணம் செய்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது. தன்னைக் குறித்து திருமண வதந்திகள் பரவி வருவதையடுத்து,
திருமண வதந்தி
த்ரிஷா இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “பிறர் எனக்காக எனது வாழ்க்கையை திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அப்படியே எனது தேனிலவையும் அவர்கள் திட்டமிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.