த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுகிறாரா? உறுதிப்படுத்திய தாய்!
த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதாக பரவிய தகவலுக்கு தாயார் விளக்கமளித்துள்ளார்.
த்ரிஷா
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாகி வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
சூர்யா 45 திரைப்படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ள மாசாணி அம்மன் படத்திலும் நடிக்கவுள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் திரைக்கு வரும். இவ்வாறு படு பிஸியாக இருக்கும் த்ரிஷா விரைவில் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து த்ரிஷாவின் தாய் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அதில், த்ரிஷா சினிமாவை விட்டு விலகப்போகிறார், தமிழக வெற்றிக் கழக்கத்தில் சேரப்போகிறார். அதிமுகவிலும் இணையப்போகிறார் என்று பரவி வரும் செய்தியில் உண்மை இல்லை.
த்ரிஷா சினிமாவை மிகவும் நேசிக்கக்கூடியவர், நடிப்பை அவர் உயிராக நினைக்கிறார். எப்படி சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு செல்வார்? அவர் உயிர் இருக்கும் வரை படங்களில் நடித்துக் கொண்டுதான் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.