சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா? அதிர்ச்சி முடிவு - ரசிகர்கள் வருத்தம்!
த்ரிஷா விரைவில் சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல் பரவி வருகிறது.
த்ரிஷா
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாகி வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். சூர்யா 45 திரைப்படத்திலும் இவர்தான் ஹீரோயின்.
சினிமா விலகல்
தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ள மாசாணி அம்மன் படத்திலும் நடிக்கவுள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் திரைக்கு வரும். இவ்வாறு படு பிஸியாக இருக்கும் த்ரிஷா விரைவில் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் திருமணம் குறித்த தகவல் தற்போதைக்கு எதுவும் இல்லாததால், அரசியலில் இறங்குவாரா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
விஜய்யை தொடர்ந்து தற்போது த்ரிஷாவும் சினிமாவிலிருந்து விலகி ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.