முன்னணி நடிகருக்கு கூட்டத்தில் கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை த்ரிஷா - வைரலாகும் வீடியோ!

Madhavan Trisha Viral Video
By Sumathi Mar 28, 2024 02:30 PM GMT
Report

 த்ரிஷா மற்றும் மாதவன் நடித்த விளம்பர வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

madhavan - trisha

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, பாலிவுட் என கலக்கி வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து விடாமுயற்சி, GOAT உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நடிகையால் தான் த்ரிஷா இன்னும் திருமணம் செஞ்சுக்கல - தீயாய் பரவும் தகவல்!

இந்த நடிகையால் தான் த்ரிஷா இன்னும் திருமணம் செஞ்சுக்கல - தீயாய் பரவும் தகவல்!

வைரல் வீடியோ

இந்நிலையில், த்ரிஷாவின் பழைய வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது. அதில், இளம் வயதில் இருக்கும் த்ரிஷா ஜூஸ் விளம்பரத்தில் மாதவன் கன்னத்தில் முத்தமிடுகிறேன் என தனது நண்பர்களிடம் பந்தயம் செய்து, ஜூஸ் பாட்டிலில் முத்தம் கொடுத்து அதை மாதவனிடம் அனுப்புகிறார்.

அந்த ஜூஸ் பாட்டிலை கூட்டங்களுக்கு மத்தியில் அவர் வாங்கி தனது கன்னத்தில் வைத்துக் கொள்கிறார். இந்த வீடியோவினை பகிர்ந்த ரசிகர்கள் நாஸ்டாலஜியை தூசி தட்டி வருகின்றனர்.