நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா; மறுத்த மணிரத்னம் - ஏன் தெரியுமா?
த்ரிஷா, நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டதற்கு மணிரத்னம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் த்ரிஷா. தமிழ் சினிமாவின் அபி, ஜெஸ்ஸி, ஜானுவாக அடையாளம் காணப்பட்டவர் தற்போது குந்தவையாக கலக்கி வருகிறார்.
அண்மையில், பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இயக்கி 2 பாகங்களாக வெளியானது. முதல் பாகம் சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில் 2ம் பாகம் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது.
மணிரத்னம் மறுப்பு
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய த்ரிஷா, “நான் முதல் நாள் மணிரத்னம் சாரின் ஆபீஸுக்கு சென்றபோது அவரிடம் நந்தினி பாத்திரத்தை எனக்கு வழங்குமாறு கேட்டேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும், அந்த கதாபாத்திரத்துக்கு தான் முதலில் ஆள் முடிவுசெய்யப்பட்டது.
அதனை ஐஸ்வர்யா ராய் மட்டுமே செய்யமுடியும் என்று கூறிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், திரையில் உயிர் உங்களுடையது தேவி என குந்தவை கதாபாத்திரம் பலரையும் கட்டிப்போட்டது மறுக்கமுடியாத உண்மை.