அரசியலில் எண்ட்ரியா? த்ரிஷாவே சொன்ன ஷாக் ஸ்டேட்மெண்ட்!

Trisha Only Kollywood Indian Actress
By Sumathi Aug 23, 2022 08:12 AM GMT
Report

த்ரிஷா விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாக பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 த்ரிஷா

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே,

அரசியலில் எண்ட்ரியா? த்ரிஷாவே சொன்ன ஷாக் ஸ்டேட்மெண்ட்! | Trisha Is Entering Politics Information

சாமி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் பெரிய மைல்கல்களாக மாறியது.

அரசியலில்..?

விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது, 39 வயதாகும் நடிகை திரிஷா கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன், ராம், ராங்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அரசியலில் எண்ட்ரியா? த்ரிஷாவே சொன்ன ஷாக் ஸ்டேட்மெண்ட்! | Trisha Is Entering Politics Information

சமீப காலமாக விரைவில் நடிகை திரிஷா அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அதுவும் தேசிய கட்சியான காங்கிரஸில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 வதந்திக்கு முற்றுப்புள்ளி 

இந்நிலையில், இதுகுறித்து நடிகை திரிஷாவே விளக்கம் அளித்துள்ளார். தான் அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை.

அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.