த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கு காரணமே அவங்கதான் - உண்மை உடைத்த பிரபலம்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
த்ரிஷா - ராணாவின் காதல் முறிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிஷா - ராணா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
காதல் முறிவு
சில வருடங்களுக்கு முன்பு வருண் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் வரை அந்த உறவு நீடிக்கவில்லை. தொடர்ந்து, தெலுங்கில் நடித்தபோது ராணா டகுபதியை காதலித்ததாக கூறப்பட்டது. அந்த காதலும் பாதியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, ராணா டகுபதி ராமநாயுடு குடும்பத்தை சேர்ந்தவர். ரொம்பவே செல்வாக்கு மிகுந்த குடும்பம். இவரது சித்தப்பாதான் வெங்கடேஷ். நாகார்ஜுனா குடும்பம். அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
திருமணம் என்றால் தங்களது சொந்தத்துக்குள் மட்டுமே நடக்க வேண்டும் என்று யோசிப்பார்கள். சமந்தாவைக்கூட முதலில் நாகார்ஜுனா குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. நாக சைதன்யாவின் பிடிவாதத்தால் ஏற்றுக்கொண்டார்கள். த்ரிஷாவுடன் ராணாவுக்கு காதல் இருப்பதை ராணா குடும்பம் சுத்தமாக விரும்பவில்லை.
அதனால்தான் அவர்கள் காதலை ஆரம்பத்திலேயே முறித்துவிட்டார்கள், தெலுங்கில் த்ரிஷாவின் மார்க்கெட் காலி ஆனதற்கும் அந்தக் குடும்பம்தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.