விஜய்யிடம் பிடிக்காத ஒரே விஷயம் அதுதான் - த்ரிஷா பகிர்ந்த ரகசியம்!
விஜய் குறித்து திரிஷா பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். அண்மையில், விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் லியோ திரப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

த்ரிஷா தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இதனால் அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்குவார். ஹிந்தியிலும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
விஜய்யின் செயல்
இதற்கிடையே லியோ படத்தின் ஷூட்டிங்கின்போது விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக டேட்டிங் சென்றதாக கூறப்பட்டது. இதனால், விஜய்-சங்கீதா இடையே விவாகரத்து என்றெல்லாம் செய்திகள் பரவியது. ஆனால் அனைத்தும் வதந்தி என்று பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில், விஜய் குறித்து திரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “ஷூட்டிங்கின் இடைவேளையில் விஜய் பெரும்பாலும் அமைதியாகவே இருப்பார். அவர் அப்படித்தான். யாரிடமும் பேசமாட்டார். ஷூட் முடிந்தால் போதும் ஒரு சேரை எடுத்துப்போட்டுக்கொண்டு சுவருக்கு பக்கத்தில் அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருப்பார்.
சில சமயம் அவர் அமைதியாக இருப்பதை பார்த்தால், ஏதோ நாம் தவறு செய்துவிட்டோமோ என்றுகூட தோன்றும். அவரது அந்த அமைதி எனக்கு சுத்தமாகவே பிடிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil