யார் என்ன சொன்னால் என்ன? விஜய் எனக்கு அப்படித்தான் - த்ரிஷா ஓபன்டாக்!
விஜய் குறித்து திரிஷா பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்-த்ரிஷா
விஜய்யுடன், த்ரிஷா கில்லி படத்தில் முதன்முதலாக சேர்ந்து நடித்தார். அந்தப் படத்தில் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை கட்டிப்போட்டது.
தொடர்ந்து இருவரும் திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்தார்கள். அதன்பின், நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரையும் வைத்து லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கினார்.
படத்தில் லிப் லாக் சீன் எல்லாம் இருந்தன. அந்தப் படத்துக்கு பிறகு GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். மேலும், கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு விஜய்யும், திரிஷாவும் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்றார்கள்.
நல்ல நண்பர்கள்
இருவரும் டேட்டிங் செய்துக்கொண்டிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்கள். திரிஷாவால்தான் விஜய்யும், சங்கீதாவும் பிரிந்திருக்கிறார்கள் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில், விஜய் குறித்து நடிகை த்ரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், "விஜய்யும் நானும் கில்லி படத்தில்தான் முதன்முறையாக ஒன்றாக சேர்ந்து நடித்தோம். விஜய் ரொம்பவே அமைதியானவர். ரிசர்வ்வான ஆள். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். விஜய் எப்போதுமே எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒரு ஆள்தான்.
அவர் ரொம்பவே Professionalஆக இருப்பார். எவ்வளவோ அவர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் ரொம்ப எளிமையாக இருப்பார்" என தெரிவித்துள்ளார்.