40 வயதாகியும் இதனால் தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல - மனம் திறந்த த்ரிஷா
திருமணத்தின் மீதான பார்வை குறித்து நடிகை த்ரிஷா மனம் திறந்துள்ளார்.
த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் த்ரிஷா. தமிழ் சினிமாவின் அபி, ஜெஸ்ஸி, ஜானுவாக அடையாளம் காணப்பட்டவர் தற்போது குந்தவையாக கலக்கி வருகிறார்.
40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருபவர் இன்னும் திருமணம் செய்யாதது குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தொழிலதிபர் வருண் என்பவருடன் த்ரிஷா திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது.
திருமணம்
ஆனால், சில விஷயம் சரிபட்டு வரவில்லை என்பதால் இந்த முடிவு எடுத்ததாக அவரது அம்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில், த்ரிஷா அளித்துள்ள பேட்டி ஒன்றில், திருமணம் என்பது 30 வயசுக்குள்ள பண்ணி வாழ்க்கைல செட்டில் ஆகிறனும்ங்கற கான்சப்டே தப்பு தான்.
எல்லாருக்கும் 30க்கு மேல தான் ஒரு தெளிவு வருது, அதுக்கப்புறம் துணையை தேடிக்கிறது தான் சரியா இருக்கும். நான் திருமணம் சரியாக அமையாத பல நபர்களை பார்த்துள்ளேன். எனது நண்பர்களே கூட திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை.
எனவே, நான் எனக்கு அனைத்து விதத்திலும் சரியாக அமையும் நபரை பார்த்தால் கட்டாயம் திருமணம் செய்துக்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.