உதவி கேட்டு வந்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்!
உதவி கேட்டு வந்த பெண்ணை திரணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மேற்கு வங்கம், காரக்பூர் நகராட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலராக இருப்பவர் முகேஷ் ஹம்னே. இவரைடம் கணவனை இழந்த இளம்பெண் ஒருவர் உதவி கேட்டு வந்துள்ளார். அவர் கணவனை இழந்த பின் அரவிந்த் ராவ் என்பவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அரவிந்த் அந்தப் பெண்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஏமாற்றுவதை அறிந்த பெண் கவுன்சிலரான முகேஷிடம் புகார் அளித்துள்ளார்.
கவுன்சிலர் அத்துமீறல்
தொடர்ந்து திரிணாமுல் காங்கிரச் கட்சியிலும் இணைந்துள்ளார். அதனையடுத்து, அந்தப் பெண்னையும், அரவிந்தையும் பேசுவதற்காக தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார் கவுன்சிலர். அப்போது அங்கும் அரவிந்த் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், கவுன்சிலரும், அலுவலக ஊழியர் ஒருவரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால், அந்தப் பெண் அரவிந்த் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் கவுன்சிலர் மீது கொடுக்கப்படவில்லை.
மறுப்பு
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இதனை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாகவும் கவுன்சிலர் மிரட்டினார்.
அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து, இது கட்சிக்கு எதிராக நடக்கும் சதி என கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.