4 மாதங்களுக்கு பின் பலி - தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா!
சில மாதங்களுக்கு பின் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இந்நிலையில், ஒமைக்ரான் வகை தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
திருச்சியைச் சேர்ந்த உதயகுமார்(27), பெங்களுரில் பணி புரிந்து வருகிறார். இவர் சுற்றுலா செல்வதற்காக கோவா சென்றுள்ளார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா முடிந்த பின் திருச்சி திரும்பியுள்ளார்.
ஒருவர் பலி
அதனைத் தொடர்ந்து அவருக்கு கடும் வயிற்றுப்போக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனையடுத்து பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழந்தார்.
4 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
தற்போது, தமிழ்நாட்டில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.