அக்கா ஊழல் பட்டியலோடு சந்திக்கிறேன் - தமிழிசையை சீண்டும் திருச்சி சூர்யா!
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுடன் திருச்சி சூர்யா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
நீக்கம்
கட்சிக்கு தலைமைக்கு எதிராக செயல்பட்டார் என்ற காரணத்தால், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தமிழிசையை சமூகவலைத்தளத்தில் அவர் விமர்சித்ததே இதற்கு காரணம். இதற்கும் அவர் அண்ணாமலைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தார். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார்.
கட்சியின் தலைமைக்கு ஜாதி ரீதியிலான நடவடிக்கையா? தான் நீக்கப்பட்டது என்ற கேள்வியை அண்மையில் எழுப்பியிருந்தார் திருச்சி சூர்யா.
ஊழல் பட்டியல்
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழிசையை சீண்டியிருக்கிறார் திருச்சி சூர்யா. அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவு வருமாறு, அக்கா உங்களை மறந்துவிட்டேன் என்று நினைக்காதீர்கள்.
கண்டிப்பாக உங்களுக்கான முக்கியத்துவம் பாஜக கொடுக்கவில்லை என்றாலும் என் மனதில் கண்டிப்பாக உண்டு.புதுவை பாஜகவை அழித்தது பத்தாது என்று இப்போது தமிழ்நாட்டு பாஜகவிலும் களம் இறங்கி அழித்துக் கொண்டிருக்கும் உங்களை மறப்பேனா?
அக்கா உங்களை மறந்துவிட்டேன் என்று நினைக்காதீர்கள். கண்டிப்பாக உங்களுக்கான முக்கியத்துவம் பாஜக கொடுக்கவில்லை என்றாலும் என் மனதில் கண்டிப்பாக உண்டு.
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) June 23, 2024
புதுவை பாஜகவை அழித்தது பத்தாது என்று இப்போது தமிழ்நாட்டு பாஜகவிலும் களம் இறங்கி அழித்துக் கொண்டிருக்கும் உங்களை மறப்பேனா?
உங்கள்… pic.twitter.com/Kjo32aSDIe
உங்கள் நீண்ட ஊழல் பட்டியலை பாண்டிச்சேரியில் எடுத்து தொகுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிறது.
விரைவில் பட்டியலோடு சந்திக்கிறேன். வருத்தம் வேண்டாம் அக்கா ? என பதிவிட்டுள்ளார்.