Monday, May 5, 2025

என் மேல் நடவடிக்கை - அண்ணாமலை தமிழிசை ஜாதி லாபியா? திருச்சி சூர்யா கொதிப்பு

Smt Tamilisai Soundararajan Tamil nadu BJP K. Annamalai Trichy Suriya Shiva
By Karthick 10 months ago
Report

திருச்சி சூர்யா பாஜக மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்.

திருச்சி சூர்யா நீக்கம்

கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக அண்ணாமலையின் தீவிரமாக இருந்த திருச்சி சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதில், தமிழிசையை அவர் விமர்சித்து கருத்து தெரிவித்ததே காரணம் என கூறப்படுகிறது.

Trichy suriya

கட்சியில் இருந்து வெளியேறியவர் தொடர்ந்து கட்சி குறித்து பல தரப்பட்ட கருத்துக்களை வெளியிட துவங்கியுள்ளார். அப்படி தான் அவர், ஜாதியை மையமாக வைத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவு வருமாறு,

பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன்.

ஜாதி லாபியா?

  இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?

Annamalai Trichy suriya

தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?

என்ன நடக்கிறது தமிழக பாஜகவில்? அடுத்தடுத்து 2 மாவட்ட தலைவர்களை நீக்கிய அண்ணாமலை

என்ன நடக்கிறது தமிழக பாஜகவில்? அடுத்தடுத்து 2 மாவட்ட தலைவர்களை நீக்கிய அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா?

Tamilisai Soundararajan Annamalai

சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது.