என்ன நடக்கிறது தமிழக பாஜகவில்? அடுத்தடுத்து 2 மாவட்ட தலைவர்களை நீக்கிய அண்ணாமலை

Smt Tamilisai Soundararajan Tamil nadu BJP K. Annamalai
By Karthick Jun 23, 2024 06:28 AM GMT
Report

தமிழக பாஜகவில் தொடர்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.

தமிழக பாஜக

தென்தமிழ்நாட்டில் கால்பதிக்க தீவிரமாக வேலை செய்து வருகிறது பாஜக. தமிழகமும் அக்கட்சி பெறும் முனைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழக கட்சி தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்து கட்சி பல விஷயங்களில் தீவிரம் காட்டி வருகிறது.

BJP flag

அதே நேரத்தில் அண்ணாமலையும் தனிப்பட்ட நபராக மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நபராக உருப்பெற்றுள்ளார். அதுவே கட்சிக்குள் சில பிரச்சனைகளை உண்டாகியுள்ளதாக தகவல் வெளிவருகிறது.

3 பேர் நீக்கம்

தமிழிசை கட்சி மேலிடத்திலும் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழிசையை கடுமையாக தாக்கி பேசிய அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்...பலியானோருக்கு தலா ரூ.1 லட்சம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்...பலியானோருக்கு தலா ரூ.1 லட்சம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

அதுவே சலசலப்புகளை உண்டாக்கிய நிலையில், தற்போது மீண்டும் 4 கட்சி மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர்களான பாஸ்கர், அகோரம் மற்றும் திருவாரூர் மாவட்ட செயலாளரான செந்திலரசன் என்பவர் நீக்கப்பட்டுள்ளார்கள்.