கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்...பலியானோருக்கு தலா ரூ.1 லட்சம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி விரைந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்
தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகின்றது.
தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளும் இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்தது மட்டுமின்றி, களத்தில் அமைச்சர்களும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
மாநில கட்சி தலைவர்கள் தொடர்ந்து நேரில் சென்று வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த வரிசையில் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளார். கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறி, கள்ளச்சாராயம் சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் என்றும் கூறியுள்ளார் .