மானத்தமிழன் மாண்டு போகிறான் - வேடிக்கை பார்க்கிறார்கள்!! ஜெயகுமார் கோபம்

Tamil nadu Government of Tamil Nadu ADMK D. Jayakumar
By Karthick Jun 20, 2024 08:26 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

ஜெயக்குமார் விமர்சனம்

தமிழகத்தை உலுக்கியுள்ளது கள்ளச்சாராய மரணங்கள். இது வரை 37 பேர் மரணமடைந்துள்ளனர். இன்னும் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் நீடிக்கிறது. அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

மானத்தமிழன் மாண்டு போகிறான் - வேடிக்கை பார்க்கிறார்கள்!! ஜெயகுமார் கோபம் | Admk Jayakumar In Kallakurichi Incident

அமைச்சர்கள் விரைந்துள்ளார்கள். சிபிசிஐடி நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி தமிழகத்தின் தலைப்பு செய்தியாக உள்ளது. திரைத்துறை நட்சத்திரங்கள் விஜயை தவிர்த்து அமைதியாக தங்கள் வேலையை பார்த்து வருகிறார்கள்.

மானத்தமிழன் மாண்டு போகிறான் - வேடிக்கை பார்க்கிறார்கள்!! ஜெயகுமார் கோபம் | Admk Jayakumar In Kallakurichi Incident

அவர்களை கடுமையாக சாடியுள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,    

கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது!இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை!

மானத்தமிழன் மாண்டு போகிறான் - வேடிக்கை பார்க்கிறார்கள்!! ஜெயகுமார் கோபம் | Admk Jayakumar In Kallakurichi Incident

நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர்?

பாதிக்கப்பட்ட குழந்தைகள்...கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் - எடப்பாடியார் அறிவிப்பு!!

பாதிக்கப்பட்ட குழந்தைகள்...கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் - எடப்பாடியார் அறிவிப்பு!!

ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.

மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்!