பாதிக்கப்பட்ட குழந்தைகள்...கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் - எடப்பாடியார் அறிவிப்பு!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய அறைந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37'ஆக உயர்ந்துள்ளது.
எடப்பாடி பேட்டி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. நேரில் சென்று பாதிப்படைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியது வருமாறு, 36 பேர் உயிரிழந்துள்ளார்கள். அனைவருமே ஏழைகள். ஆளும் கட்சியின் ஆதரவு கள்ளச்சாராயம் விற்றவர்களுக்கு உள்ளது. கள்ளச்சாராயம் காவல் நிலையம் அருகிலேயே விற்கிறாரகள் என்றால் விற்றவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்?
25 லட்சம் வழங்குக...
இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றியும் எந்த நடவடிக்கையும் தற்போது வரை இல்லை. கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து வருவதை கடந்த ஆண்டே எச்சரித்தேன். கடந்த மார்ச் மாதத்தில் கூட சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.
அரசுக்கு கண்டுகொள்ளவே இல்லை. இந்த கள்ளச்சாராய விற்பனைக்கும், அப்பாவி ஏழைகளின் மரணத்திற்கும் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதிமுகவே ஏற்கும்
இவ்வாறு விஷ சாராயம் விற்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயை 25 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
ஒரு குடும்பத்தின் சேர்ந்த தாய் தந்தை இருவருமே இழந்து விட்டார்கள். 3 பிள்ளைகள் உள்ளார்கள். பெற்றோர்களை இழந்து வாடும் இந்த குழந்தைகளின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும். அதே போல அடுத்த 10 வருடத்திற்கு இக்குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.5000 ரூபாய் வழங்கப்படும்.