கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் பலி - கள்ளக்குறிச்சி விரையும் எடப்பாடி பழனிசாமி!

Tamil nadu Edappadi K. Palaniswami Kallakurichi
By Sumathi Jun 20, 2024 02:54 AM GMT
Report

கள்ளச்சாராயம் அருந்தி 29 பேர் பலியாகியுள்ள நிலையில் ஈபிஎஸ் அங்கு செல்லவுள்ளார்.

கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் பலி - கள்ளக்குறிச்சி விரையும் எடப்பாடி பழனிசாமி! | Edappadi Condemn Poisonous Liquor Case Kalakurichi

தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும்.

திமுகவின் மூன்று ஆண்டு சாதனை இது தான் - ஆவேசமான சீமான்

திமுகவின் மூன்று ஆண்டு சாதனை இது தான் - ஆவேசமான சீமான்

ஈபிஎஸ் இரங்கல்

மறைந்தோர்க்கு @AIADMKOfficial சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன். ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது.

மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்” என சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.