கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி - பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளி!

BJP Bihar Death
By Sumathi Dec 15, 2022 05:54 AM GMT
Report

கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 பேர் பலி

பீகாரில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. அங்குள்ள சாப்ரா, மஷ்ரக் மற்றும் இசுவாபூர் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி - பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளி! | 21 People Died Bihar Drinking Spurious Liquor

இவர்களில் 21 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இங்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பினர்.