நாகையில் கள்ளச்சாராயம் காய்சிய நபர் : களத்தில் இறங்கி வெளுத்து வாங்கிய சிங்கப்பெண்கள்

By Irumporai Jun 29, 2022 07:44 AM GMT
Report

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் சாராய விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர் .

களை கட்டிய கள்ளச்சராயம்

ஆனாலும் தொடர்ந்து சாராய விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த ஆதமங்கலம் ஊராட்சி கீழகண்ணாபூர்பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது அந்த் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் குடிக்க பணமில்லாமல் மனைவியின் தாலி சங்கிலியை சாராய வியாபாரியிடம் கொடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

nagai

வீட்டில் பிரச்சனை ஏற்படவே மனைவியின் தாலி சங்கிலியை தருமாறு முத்துகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். அவர் முடியாது என்று சொல்லி ராமசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,இதுகுறித்து வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அப்பகுதியைச் சேர்ந்த கிராமப் பெண்கள் ஒன்று திரண்டு முத்துகிருஷ்ணனை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

களத்தில் இறங்கி்ய சிங்கப்பெண்கள்

அப்போது அவர் அங்கிருந்து தப்பியுள்ளார் , இதனைத் தொடர்ந்து மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஒன்று சேர்ந்து சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரைக் கொட்டகை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட்டுகளை மற்றும் சாராய கடை வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nagapattinam

கள்ளச்சாரயம் காய்ச்சியதற்கு நடவடிக்கை எடுக்க தாமதமானதால் களத்தில் இறங்கி பெண்களே சாரயக்கடையினை சூறையாடியது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனா கணவர் மரணம் .. இதயம் கணக்கிறது, வாழ்க்கை கொடுமையானது : குஷ்பூ ட்வீட்